Sthithapragnya என்றொரு பதம் பகவத் கீதையில். ஸ்லோகம் 54, அத்யாயம் 2. சாங்கிய யோகா. திடமான, வைராக்கியமான என்கிற பொருளில் அமையும்.
ஒவ்வொரு ஜீவனும் பரம சத்ய நிலையினை உணர்தறிந்து, அதே ஸ்திதியில், ஆன்மானுபவத்தில் நிலைத்திருப்பதற்கான சிருஷ்டியே.
அவ்வனுபவம் கைகூடும் வரை வாழ்க்கையில் பலப் பல சவால்கள். சவால்களையெல்லாம், இடர்களையும் மனோ தைரியத்துடன் வெற்றி கொள்வதையே ஸ்திதபிரக்ன்யா -steady wisdom என்பதாக தளற்றிருந்த அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணன் உபதேசித்திருக்கிறார்.
பகவான் ரமண மகரிஷி அவர்கள் 42 ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து கீதையின் சாரமாக பக்தர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் கவியரசரின் கீழ்க்கண்ட பாடல் வரிகளும் மனதில் மின்னிச் செல்கின்றன:
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில்
சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்
அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன்
பாசத்தாலே
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை
என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து
துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா.
மஹான்களும், அமரக் கவிஞர்களும் எவ்வளவு சரஸ்வதி கடாக்ஷம் மிக்கவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்று வியப்பு மேலிடுகிறது.
பகவான் பகவத் கீதையில் இருந்து மாத்திரம் அல்ல. அவர் காலத்தில் பெரிய புராணம், ஆதி சங்கரர் விவேக சூடாமணி போன்ற பொக்கிஷங்களை எல்லாம் பக்தர் பயன் பெற எடுத்துரைக்கிறார்.
கவியரசரின் ஆன்மிகப் படைப்புக்கள் பறந்து விரிந்தவை. மேலே சொன்ன ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடலில் கீதையை மட்டும் தொட்டுச் செல்லவில்லை. அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் ஒன்றையும் கோடிட்டுக் காட்டுகிறார்:
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே."
— திருநாவுக்கரசர் தேவாரம் (6.95.3)
Hare Krsna

