உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்.
தமிழில் மேலுள்ள உயர்ந்த கருத்தைப் படித்தும், கேள்வியும் உற்றிருப்போம்.
தேர்ந்த தமிழ் ஆர்வலரன்றி, ஏனையோர் அதன் பொருள் குறித்து ஆழ்ந்திருப்போமோ என வினவினால் விடையறியாதிருப்போம்.
புதிய வாசிப்புக்கள்.
புதிய பரிமாணங்கள் .
A LITTLE CONTEMPLATION..
What's that உள்ளுவது?
சற்றே ஐயன் திருவள்ளுவரின் குறளைக் காண்போமா?
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:596)
உள்ளுவதற்க்கு விளக்கம் மு வரதராசனாரின் பொழிப்புரையில் காண்போமா?:
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
எண்ணுவது = நினைப்பது .
நினைப்பது எது?
புலன்களை நாம் அறிவோம்.
காது கேட்பதற்கு.
நா ருசிப்பதற்கு
கண் பார்ப்பதற்கு
மூக்கு முகர்வதற்கு.
தொடு உணர்வு .
ஐம்புலன்கள் தானா?
நினைப்பது எது?
ஐம்புலன்களும் நமக்குத் தெரியும்.
நினைக்கின்ற புலன் நம் பார்வைக்குப் புலப்படாது .
அது தான், நமது விசித்திர மனம்.
மனம் என்றதும் மற்றோர் குறளைப் படிக்கத் தோன்றுகிறது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற "
குறள் :34
மனத்துக்கண் _ உள்ளத்தில்
மாசிலன் _ குற்றம் இல்லாதவன்
ஆதல் _ ஆக இருத்தல்
அனைத்து _ எல்லாம், அவ்வளவுடையதே
அறன் _ அறம்
ஆகுல _ ஆரவாரம், பகட்டு
நீர _ தன்மை உடையவை
பிற _ மற்றவை எல்லாம்
மீண்டும் மு.வ .
எளிமையான விளக்க உரைக்கு மு.வ.வுக்கு நிகர் மு.வ வே.
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
Wrapping with Gita:
Chap 6. Slogan 5:
uddhared ātmanātmānaṁ nātmānam avasādayet
ātmaiva hyātmano bandhur ātmaiva ripur ātmanaḥ
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् |
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: || 5||
uddharet—elevate; ātmanā—through the mind; ātmānam—the self; na—not; ātmānam—the self; avasādayet—degrade; ātmā—the mind; eva—certainly; hi—indeed; ātmanaḥ—of the self; bandhuḥ—friend; ātmā—the mind; eva—certainly; ripuḥ—enemy; ātmanaḥ—of the self
Elevate yourself through the power of your mind, and not degrade yourself, for the mind can be the friend and also the enemy of the self.
May thy thoughts be noble.
May thy life blissful.
Hare Krsna.
No comments:
Post a Comment